STM Banner USA
VRV Banner USA
www.garudabazaar.com

ஷில்பா ஷெட்டியின் தங்கைக்கு நடுரோட்டில் நேர்ந்த பாலியல் கொடுமை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கையும், நடிகையுமான ஷமிதா ஷெட்டியை அசிங்கமாக பேசிய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Shilpa Shetty's Sister Shamita Shetty verbally abused in Road Rage Incident

தமிழில் பிரபுதேவா நடித்த ‘மிஸ்டர்.ரோமியோ’ திரைப்படத்தில் நடித்த ஷில்பா ஷெட்டி பாலிவுட்டில் பிரபலமான நடிகை. இவரது தங்கையும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளரான ஷமிதா, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தானேவில் இருந்து விவியான் மால் அருகே காரில் சென்றுள்ளார்.

அப்போது 3 நபர்கள் வந்த பைக் ஒன்று அவரது கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதனால், காருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய கார் ஓட்டுநரை அந்த மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.

அத்துடன் நடிகை ஷமிதாவையும் பொதும் இடம் என்றும் பாராமல் நடுரோட்டில் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர். இது தொடர்பாக தானே காவல் நிலையத்தில் அந்த மர்ம நபர்கள் மீது ஷமிதா புகார் தெரிவித்துள்ளார். ஷமிதா ஷெட்டியின் புகாரை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.