STM Banner USA
VRV Banner USA
www.garudabazaar.com

ஆர்யாவுக்கு கல்யாணமா? நண்பன் சந்தானத்தின் அல்டிமேட் பதில்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ஆர்யாவுக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் சந்தானம் கலகலப்பான பதிலை கூறியுள்ளார்.

Santhanam opens up about Arya's Wedding

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படத்தின் ப்ரஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்தானம் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, நடிகரும், சந்தானத்தின் நெருங்கிய நண்பருமான ஆர்யாவின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அப்படியா ஆர்யா கல்யாணம் கன்ஃபார்ம் ஆகிடுச்சா? ஒவ்வொரு முறையும் இப்படி தான் சொல்றாங்க.. அவன்கிட்ட பேசிட்டு நான் அது பற்றி சொல்றேன் என தெரிவித்தார்.

மேலும், தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் பற்றி பேசிய சந்தானம், முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடத்தில் இருக்கும் கலகலப்பு இந்த பாகத்தில் படம் முழுக்க இருக்கும் என்றார். டிவி நிகழ்ச்சி, காமெடி நடிகர், தயாரிப்பாளர், நடிகர் என அனைத்தும் பார்த்துவிட்டாச்சு, அடுத்தது இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றார்.

இயக்குநரானால், கதைக்கு ஏற்ற ஹீரோவை தேர்வு செய்வேன் என்றும், ஆர்யாவை ஹீரோவாக நடிக்க வைப்பேன் என்றும் சந்தானம் தெரிவித்தார். ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் வரும் பிப்.7ம் தேதி ரிலீசாகவுள்ளது.

ஆர்யாவுக்கு கல்யாணமா? நண்பன் சந்தானத்தின் அல்டிமேட் பதில் VIDEO