கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகியோர் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் கழுகு.
கொடைக்கானல் பகுதியில் தற்கொலை செய்பவர்களின் உடலை மீட்டெடுக்கும் பணி செய்பவர்களின் கதையை எதார்த்தமாக பதிவு செய்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்துக்கு யுவனின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய சத்யசிவாவே இதனையும் இயக்குகிறார்.
இந்த படத்தில் கிருஷ்ணா, பிந்துமாதவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் யுவன் இசையில் தற்போது சகலகலாவள்ளி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
யுவன் இசையில் கழுகு 2 படத்திலிருந்து வெளியான சகலகலாவள்ளி பாடல் VIDEO