Petta USA All Banner

வெளியான ஒரே நாளில் மாபெரும் சாதனை புரிந்த தனுஷின் ரௌடி பேபி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Rowdy baby song from Dhanush's Maari 2 creates Youtube record

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2015 ஆம் வருடம் வெளியான படம் மாரி. அந்த படத்துக்கு அனிருத் இசை மிகப் பெரிய பலமாக அமைந்திருந்தது.  முதல் பாகம் வெளியான போதே இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியானது.

 

மேலும் அந்த படத்துக்கு நாயகியாக சாய் பல்லவியும் , வில்லனாக பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் வில்லனாக ஒப்பந்தமாகினர்.

 

தனுஷின் கெட்டப் தவிர, முதல் பாகத்துடன் துளியும் தொடர்பில்லாத இந்த படத்தில் அனிருத்துக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

யுவனின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த கவனம் பெற்றன. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் வைரல் ஹிட்.

முதலில் யூடியூபில் வெளியான ரௌடி பேபி பாடலின் லிரிக்கல் வெர்ஷன் வெளியாகி 35 நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.

 

பின்னர் சமீபத்தில் இதன் வீடியோ சாங் வெளியாகி பிரபலமானது. பாடலுக்கு நடன் அமைத்தது பிரபு தேவா. பின்னர் கேட்கவா வேண்டும். இயல்பிலேயே நல்ல டான்சர் என பெயரெடுத்த சாய் பல்லவியும், தனுஷும் தங்களது துள்ளலான நடனத்தால் பார்வையாளர்களை தங்கள் வசப்படுத்தியிருந்தனர்.

 

இதனால் இந்த பாடல் யூடியூபில் ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது . மேலும் வெளியான ஒரே நாளில் 28,80,000 லைக்குகள் பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

 

இதனை தனுஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த பாடல்களை பகிர்ந்து வருகின்றனர்.

வெளியான ஒரே நாளில் மாபெரும் சாதனை புரிந்த தனுஷின் ரௌடி பேபி VIDEO