சன் பிக்சரஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியான படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, நவாஸுதின் சித்திகி, சசிக்குமார், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையமைத்த பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்திருந்தது. அதன் காரணமாக படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.
படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் 90களின் ரஜினியை மீண்டும் திரையில் பார்க்க முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த படம் அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் வெளியாகியிருந்தது. இருவரும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்கள் என்பதால் இரு படங்களின் வசூல் நிலவரம் குறித்து அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
இந்த படம் சென்னையில் 4 நாட்களில் மட்டும் ரூ. 4.76 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது.