நடிகர் ஜீவா யதார்த்த சினிமா, கமர்ஷியல் படம் என இரண்டிலும் குறிப்பிட்ட தக்க வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக அவர் நடித்த சங்கிலி புங்கிலி கதவத் தெற மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்களும் அவருக்கு போதிய வெற்றியை கொடுத்தன.
தற்போது அவர் கொரில்லா மற்றும் ஜிப்ஸி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், இரண்டும் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து சூப்ப்ர் குட் பிலிம்ஸின் 90 வது படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடித்துவருகிறார்.
இந்நிலையில் அவர் இந்தி படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது . இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,
"1983 வேர்ல்ட் கப் " என்ற படத்துல ரன்வீர் சிங்குடன் நடிக்கிறேன். பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ, அது மாதிரி இந்த படமும் இருக்கும். 100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்.
நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன். அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்.
1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்.
கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங். அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம்.
அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே. தமிழ் நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே.
அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம். மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது. மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார்.
இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம். லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு.
இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இருக்கும். என்றார்.