சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mrலோக்கல் திரைப்படம் ஒரு ஃபுல் மீல்ஸ் திரைப்படமாக இருக்கும் என நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
‘மெரினா’,‘எதிர் நீச்சல்’,‘மான் கராத்தே’,‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - சதீஷ் காமெடி கூட்டணி ‘Mrலோக்கல்’ திரைப்படத்தில் இணைந்துள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘Mrலோக்கல்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சதீஷ் Behindwoods தளத்திடம் பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசிய சதீஷ், Mrலோக்கல் திரைப்படம் ஒரு ஃபுல் மீல்ஸ் திரைப்படமாக இருக்கும். இப்படத்தில் காதல், காமெடி, சண்டை, மாஸ், குடும்ப செண்டிமென்ட் என மசாலா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களுக்கும் Mrலோக்கல் படத்தில் உள்ளது.
மே 1, ஒரு ராசியான நாள் எங்களுக்கு, நானும்,சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்த ‘எதிர் நீச்சல்’ திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு மே.1ம் தேதி, புதன்கிழமை ரிலீசாகி பெரும் வெற்றியை பெற்றது. அதேபோன்று Mrலோக்கல் திரைப்படம் வரும் மே.1ம் தேதிக்கு ரிலீசாகவிருப்பதில் மகிழ்ச்சி என சதீஷ் தெரிவித்தார்.
MR லோக்கல் ஒரு ஃபுல் மீல்ஸ் படம்- சொன்னது யார் தெரியுமா? VIDEO