தெலுங்கில் ஹீரோவாக மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர் ஜெகபதி பாபு. பின்னர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.
தமிழிலும் தாண்டவம், லிங்கா, பைரவா போன்ற படங்களில் மூலம் தனது வில்லத்தனத்தால் மிரட்டினார். இந்நிலையில் தல அஜித் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும் விஸ்வாசம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
விஸ்வாசம் டிரெய்லரில் என் கதையில நான் ஹீரோடா என அஜித்திடம் பேசும் போது தான் அஜித்தின் மாஸ் இமேஜுக்கு நிகரான வில்லனாக தெரிந்தார்.
இந்நிலையில் இவர் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளது குறித்து தெரிவிக்கும் போது, வெளிப்படையாக சொல்வதென்றால் குழந்தை பருவத்தில் இருந்தே தமிழில் ஒரு ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக, விஸ்வாசம் என் நீண்ட கால கனவை நிறைவேற்ற போகிறது"
அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர். மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார். மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.
விஸ்வாசம் படத்தில் ஹீரோ, வில்லன் என இருவருமே "சால்ட் 'என்' பெப்பர்" தோற்றத்தில் தோன்றுவதால், ஆரம்பத்தில் இருந்து நேர்மறையாக அதை உணர்ந்தேன். அஜித்தை ரசிகர்கள் அத்தகைய நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் மாஸ் மற்றும் கிளாஸ் என ஒரு கலவையை கொண்டிருக்கும்.
குறிப்பாக மாஸ் காட்சிகளை, அவரது அலப்பறையை, அப்பாவிதனத்தை அவருடைய ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் நன்றாக அனுபவிப்பார்கள். உண்மையில், என்னுடைய சிந்தனையுடன் அந்த கதாப்பாத்திரம் ஒத்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.
குறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் மோதல் மிக முக்கியமாக, அவர்களின் வித்தியாசமான, வேறுபட்ட சிந்தனைகளால் நடப்பது தான். நான் என்ன நினைக்கிறேனோ, என்ன செய்கிறேனோ அது தான் சரி என நம்புகிறவன் நான். அதனால் தான் "என் கதையில நான் ஹீரோ டா" என்று வசனம் பேசுகிறேன்.