தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம்.
சிவா-அஜித் கூட்டணியில் உருவான 4வது திரைப்படமான ‘விஸ்வாசம்’ அஜித் ரசிகர்களையும் தாண்டி ஃபேமிலி ஆடியன்ஸை பெரிதும் கவர்ந்தது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படம் உருவான பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களை தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பிஹைண்ட்வுட்ஸிடம் பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், அஜித்திற்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால், விஸ்வாசம் திரைப்படத்தை சென்னையில் படமாக்க முடியவில்லை. சாதாரனமாகவே அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தால் 20 பேர் பைக்கில் அவரை பின் தொடர்ந்து செல்வார்கள். சென்னையில் ஷூட்டிங் நடத்தியிருந்தால் கூட்டம் கூடியிருக்கும். போலீஸ் வைத்து கூட்டத்தை களைப்பது போன்ற விஷயங்களை அஜித் விரும்பமாட்டார்.
அதன் காரணமாகவே விஸ்வாசம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைத்து படமாக்கட்டப்பட்டது. விஸ்வாசம் படத்தின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்ட போன்ற பெரிய திரைப்படத்துடன் ரிலீசான போதிலும், விஸ்வாசம் படத்திற்கு ஆடியன்ஸ் கொடுத்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சியாக உள்ளது.
சிவா-அஜித்-சத்யஜோதி கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்காததால் வருத்தத்தில் இருந்தபோது அஜித் தாமே முன்வந்து இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருந்தார். அப்படி தான் விஸ்வாசம் உருவானது என சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்தார்.
ஏன் சென்னைல அஜித் படம் ஷூட் பண்றது கஷ்டம்- தயாரிப்பாளர் ஓபன் டாக் VIDEO