துல்கர் சல்மானின் 25 வது படத்தில் இயக்குநர் கௌதம் மேனன்
Home > Tamil Movies > Tamil Cinema NewsBy Karthikeyan | Jan 08, 2019
பிரபல மலையாள நடிகர் துல்கார் சல்மான் தனது யதார்த்த நடிப்பாலும், தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான படங்களாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.
அவரது முதல் தமிழ் படமான வாயை மூடி பேசவும் மூலம் நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெற்றார். மேலும் ஓகே கண்மணி, நடிகையர் திலகம் போன்ற படங்களின் வெற்றி தமிழகத்தில் அவருக்கென மார்க்கெட்டை உருவாக்கியிருந்தது.
தற்போது தனது 25 படமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துவருகிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற ரக்ஷன் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். ரொமான்டிக் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தன் படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டும் கௌதம் வாசுதேவ் மேனன் கோலி சோடா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.