முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஊடக ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. இவர் மன்மோகன் சிங்கின் வாழ்ககையை அடிப்படையாகக் கொண்டு தி ஆக்சிடன்டல் பிரைம் மினிஸ்டர் எழுதியிருந்தார்.

இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் ஒன்று உருவானது. இந்த படத்தை ருத்ரா புரொடக்ஷன், போரா புரோஸ் மற்றும் பென் இந்தியா லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் மன்மோகன் சிங்காக பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கேர் நடித்துள்ளார். சஞ்சய் பாரு வேடத்தில் அக்ஷய் கண்ணா நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு சுதிப் ராய் மற்றும் சது திவாரி இணைந்து இசையமைக்க விஜய் ரத்னகர் குட்டே இயக்கியுள்ளார்.
இந்த படம் கடந்த 11 ஆம் தேதி ஹிந்தியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
We are thrilled to announce #TheAccidentalPrimeMinister is ready to tell the story to many! Poster launched in Tamil and Telugu languages. pic.twitter.com/bnQC9OemQQ
— The Accidental Prime Minister (@TAPMofficial) January 15, 2019