இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது குருவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அனுமன் ஷாலிஷா பியூஷனை உருவாக்கியுள்ளார்.
உலக புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்ம ஸ்ரீ மேண்டலின் யு ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (பிப்.28) நினைவாக அனுமன் ஷாலிஷா பியூஷனை உருவாக்கியுள்ளார். தனது குருவிற்கு பிடித்த கடவுளான அனுமனை போற்றும் அனுமன் ஷாலிஷா பாடலை பியூஷனாக உருவாக்கியுள்ளார். இந்த பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார்.
இதனை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து பிரபல பின்னணி பாடகரான ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இவர்களுடன் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U ராஜேஷ் ஆகியோரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த பாடலை இன்று மாலை ( பிப்.28 ) சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெறும் தி கிரேட் மேண்டலின் ஷோ ( The Great Mandolin ) என்ற நிகழ்ச்சியிலும் நாளை மறுநாள் ( மார்ச் 2 ) மாலை சிங்கப்பூரில் எஸ்பிளண்ட் அரங்கில் நடைபெற உள்ள The Mandolin & Beyond என்ற நிகழ்ச்சியிலும் பிரத்யேகமாக பாட உள்ளனர். மேலும் இப்பாடல் விரைவில் இணையத்திலும் வெளியாக உள்ளது.
முதலாம் ஆண்டு நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கியிருந்த குருவே நமஹ என்ற பாடல் இன்று வரை பிரபலமாகவும், அவரவர் தங்களது குருவிற்காக சமர்ப்பிக்கும் பாடலாகவும் அமைந்தது. அந்த வரிசையில் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Here is d news..
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) February 28, 2019
On d 50th Bday of my GURU Sri.Mandolin.U.Shrinivas Anna,I hav composed a FUSION of HANUMAN CHALISA,dedicating to Him..as he was a Great Devotee of Lord HANUMAN..
Collaborated with LEGENDS..blessed🙏🏻@Shankar_Live @mandolinbros
Pls read d note for details.. 🙏🏻 pic.twitter.com/PVQRuier2a