தரமணிக்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் பேரன்பு. தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் உணர்வுப்பூர்வமான இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு யுவன் இசையைமைக்க, பாடல்களை வைரமுத்து, சுமதி ராம், கருணாகரன் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். ராம் - யுவன் உருவான மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் மனதை வருடக்கூடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு எவ்வாறு பலம் சேர்த்துள்ளது என்பதை டிரெயல்ரிலேயே நமக்கு தெரிந்திருக்கும்.
இந்த படம் உருவான விதம் பற்றியும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸியமான விஷயங்கள் பற்றியும் இயக்குநர் ராம் Behindwoods தளத்தில் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த ஊர்லேய புறக்கணிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்கள் இருக்காங்க.
அவர்களால் யாருடனும் பழக முடியாது. ஆள் கூட்டத்தில் ஒரு தனியாள் என்பது போல .. அந்த மாதிரி ஒரு மனநிலை உள்ள ஒரு மனிதன் எப்படி அதிலிருந்து மீண்டு எப்படி இந்த உலகத்த நேசிக்கக் கூடிய மனிதனாக மாறுகிறான் என்பது தான் பேரன்பு படத்துடைய கதை என்றார்.
பேரன்பு படத்தின் கதை இது தான் - இயக்குநர் ராம் சுவாரஸியத் தகவல் VIDEO