STM Banner USA
VRV Banner USA
www.garudabazaar.com

‘மதுரவீரன்’ இயக்குநர் பி.ஜி.முத்தையாவின் தாயார் காலமானார்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் வெளியான ‘மதுரவீரன்’ திரைப்படத்தை இயக்கி, தயாரித்த பி.ஜி.முத்தையாவின் தாயார் காலமானார்.

Director-Producer P.G.Muthaiah's mother passed away

‘பூ’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சகுனி’, ‘சேட்டை’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பி.ஜி.முத்தையா, கடந்த ஆண்டு வெளியான ‘மதுரவீரன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இவர் ‘ராஜா மந்திரி’, ‘பீச்சாங்கை’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். பி.ஜி.முத்தையாவின் தாயார் பிரேமாகுமரி (70), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு, திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்தையாவின் தாயார் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.