நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கி வந்தார்.
![Director opts out, Madhavan making his directorial debut with this dream film Director opts out, Madhavan making his directorial debut with this dream film](https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/director-opts-out-madhavan-making-his-directorial-debut-with-this-dream-film-photos-pictures-stills.jpg)
தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆனந்த் மகாதேவன் இப்படத்தில் இருந்து விலக, நடிகர் மாதவன் தனியாக இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக இப்படத்தை ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து இயக்கப்போவதாக மாதவன் தெரிவித்திருந்தார்.
1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
ராக்கெட்ரி திரைப்படத்தை தனது கனவு படமாக கருதும் மாதவன், இப்படத்தின் மூலம் நம்பி நாராயணின் வாழ்க்கையை உலகிற்கு சொல்ல மிகுந்த ஆவலுடன் இருக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் மாதவனுக்கு பிஹைண்ட்வுட்ஸின் வாழ்த்துக்கள்.