இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் நாயகனாக கதிரும், நாயகியாக ஆனந்தியும் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சமூகத்தில் நிலவும் சாதிக் கொடுமைகளை பேசிய இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் Behindwoods Gold Medal விருது வழங்கும் விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இயக்குநரும் பரியேறும் பெருமாள் படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அவருக்கு வழங்கினார்.
விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், உதவி இயக்குநராக 12 வருடங்கள் வேலை செய்த பிறகு இயக்குநராகியிருக்கிறேன். இயக்குநராக முதல் படத்திலேயே இந்த விருது வாங்கியதில் மகிழ்ச்சி.
படம் இயக்க வேண்டும் என்பது, என் இயக்குநர் ராம் சாரின் கனவு. அவர் கையால் இந்த விருது வாங்க வேண்டும். அவர் இங்கு இல்லை. அவரும் ரஞ்சித் அண்ணனும் ஒன்று தான் என்றார்.
சாதிய ஒடுக்குமுறை பற்றி நெருங்கிய உறவுகளிடம் ஒரு உரையாடல் நடைபெறவேண்டும் என்பது என் எண்ணம் . அது இந்த படம் செய்திருக்கிறது. என் படத்தில் நடித்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இந்த விஷயத்தில் இயக்குநர்கள் ரஞ்சித்தும் ராமும் ஒன்று தான் VIDEO