www.garudabazaar.com

இந்த வருடம் சிசிஎல் போட்டியில் சென்னை விளையாடாதது ஏன் ? உண்மை காரணம் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஒவ்வொரு வருடமும் பல்வேறு மொழி திரை நட்சத்திரங்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த வருடம் மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி டபாங்ஸ், கர்நாடகா புல்டோஸர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டரைக்கர்ஸ் ஆகிய அணிகள் விளையாடும் என அறிவிக்கப்பட்டது.

Chennai rhinos won't play in Celebrity Cricket League this year

மேலும், போட்டிக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதில் எதிலும் சென்னை ரைனோஸ் அணியின் பெயர் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து, நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஆர்யா, விஷால், சாந்தனு ஆகியோரை குறிப்பிட்டு சென்னை அணி எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு சாந்தனு மட்டும் இந்த வருடம் நாங்கள் விளையாடவில்லை பிரதர் என பதில் அளித்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு சிசிஎல்-லில் சென்னை அணி பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நமது தரப்பில் நடிகர் சாந்தனுவை தொடர்புக் கொண்ட போது, இந்த ஆண்டு சிசிஎல் போட்டியில் சென்னை அணி பங்கேற்க வேண்டாம் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக சிசிஎல் போட்டியில் விளையாடும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் சற்று பிசியாக இருந்ததால், கடைசி நேரத்தில் பயிற்சி எடுத்து போட்டியில் பங்கேற்க வேண்டாம் என நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஆகவே, அடுத்த வருடம் நடைபெறும் சிசிஎல் போட்டியில் நிச்சயம் சென்னை ரைனோஸ் அணி இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.