ஆஸ்கர் விருது பெற்ற ’ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இப்படம் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற 81வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி கலவை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய 8 பிரிவுகளில் விருது குவித்தது.
இப்படத்தில் சிறந்த இசைக்கான விருது மற்றும் ஜெய் ஹோ பாடலுக்கும் சேர்து 2 ஆஸ்கர் விருதுகள் ஏ.ஆர்.ரகுமானுக்கு பெற்றார். ஆஸ்கர் வென்ற மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் கூறி தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தினார்.
இந்நிலையில் ஆஸ்கர் வென்று பத்து ஆண்டுகள் நிறைவண்டைந்துள்ளதை அடுத்து படத்தின் கதை நடக்கும் இடமான மும்பைத் தாராவியில் ஏ.ஆர்குமான், பாடலாசிரியர் குல்சார், பாடகர்கள் சுக்விந்தர் சிங், மஹாலக்ஷ்மி ஐயர், விஜய் பிரகாஷ், நடிகர் அனில் கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
ஸ்லம்டாக் மில்லியனரின் 10 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்லம்டாக் மில்லியனர் இசை வியக்கத்தக்க கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டுள்ளது.
எனவே இந்த படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருடனும் ஆஸ்கர் வெற்றியின் 10வது ஆண்டை கொண்டாட விரும்பினோம் என்று தாராவியில் நடைபெற்ற விழாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
#SlumdogMillionaire 's soundtrack features many incredible artists, musicians, and technicians. Hence, we wanted to celebrate the 10th year of its Oscar win with everyone who was part of the project https://t.co/8tr01PsBe6#SDM10years
— A.R.Rahman (@arrahman) February 22, 2019