பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக மாரி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி. 26 வயதாகும் இவர் தன்னுடைய 20 வயதிலேயே மிஸ் இந்தியா பட்டம் சூடியவர். பிகில் படத்தை தொடர்ந்து கவின் நடித்த லிஃப்ட் படத்திலும் தாரா எனும் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்துள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கிராபிக்ஸ் டிசைனராகவும் காயத்ரி ரெட்டி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், 28.09.2022 அன்று குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை நிஷாந்த் வெளிநாட்டில் கன்ஸ்டிரக்ஷன் தொழில் செய்பவர் என்றும் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆக இருப்பதாக ஏற்கனவே காயத்ரி ரெட்டி கூறியுள்ளார்.