கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவருமாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலவும் வைரலாகின.
அதன் பின், திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் 2022, ஜூன் 9 ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். குறிப்பாக ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக் கான் உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர்.