உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14 ) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் தங்கள் இணையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்ளை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
![Vishal posted a photo with anisha and wishes to her Happy Valentines day Vishal posted a photo with anisha and wishes to her Happy Valentines day](https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/vishal-posted-a-photo-with-anisha-and-wishes-to-her-happy-valentines-day-photos-pictures-stills.jpg)
கடந்த சில வாரங்களாக நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள விருப்பதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்நிலையில் இருவரும் காதலர் தினமான இன்று தங்கள் காதலை முறைப்படி ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்தனர்.
மேலும் நடிகர் விஷாலும் நடிகை அனிஷாவை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் அறிவித்தார்.
அதன் படி இன்று அனிஷாவிற்கு முத்தமிட்ட படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது காதலர் தினவாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பல்வேறு தறப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
Happy Valentine’s Day #anisha 😘😘😘 pic.twitter.com/PiXiLYsIMb
— Vishal (@VishalKOfficial) February 14, 2019