சுந்தர். சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரஸா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து நாளை வெளியாகவுள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.
ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் விச்சு விஸ்வநாதன் Behindwoods இணையதளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, இந்த படத்தில் சிம்புவுடன் எனக்கு இது 3வது படம் . சிம்புவின் சிறிய வயதில் 2 படங்கள் நடித்துள்ளேன். சபாஷ் பாபுனு ஒரு படம் . சிம்பு அதுல ஹீரோ.
நானும் மன்சூர் அலிகானும் அதுல வில்லனாக நடித்தோம். அதன் பிறகு 20 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் சிம்புவுடன் நடித்துள்ளேன். மனதில் பட்டதை பேசக் கூடியவர் சிம்பு.
சிம்பு கிட்ட இருந்து நிறைய சர்ச்சைகள் வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சிம்பு கிட்ட இத கத்துக்கனும்னா என்ன சொல்வீங்க என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த விச்சு விஸ்வநாதன்,
ஆக்டிங் என ஒரே வரியில் பதிலளித்தார். மேலும், ஒரு சீன எப்படி நடிக்கனும் என்பதை சரியா செய்வார். அந்த படத்தின் கிளைமேக்ஸின் போது அவர் நடிப்ப பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. என்றார்.
சிம்புவிடம் இருந்து இதனை கற்றுக் கொள்ளவேண்டும் VIDEO