முரசொலி அறக்கட்டளையின் பைலா-வை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், பாஜகவில் வாரிசு அரசியல் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த ட்வீட்டிற்கு, பாஜக மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் எஸ்.ஜி.சூர்யா பதிலளித்திருந்தார்.
அவரது ட்வீட்டில், பாஜக தலைவர்கள் யாரும் எவ்வித பரிந்துரையும் இன்றி வந்தவர்கள். திமுக, காங்கிரஸ் போன்று குடும்ப ரீதியல் கட்சியை கட்டுப்படுத்துவதில்லை. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. திமுக அறக்கட்டளையின் அறங்காவலராக உதயநிதி நியமிக்கப்பட்டு, கோடான கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறார். அவரை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இது புதிது தான் என தெரிவித்திருந்தார்.
அதற்கு, திமுக டிரஸ்டில் தான் இருப்பதை நிரூபித்தால் பாஜக-வில் இணைந்துவிட தயார் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த ட்வீட்டில், ‘திமுக அறக்கட்டளையில் நான் உறுப்பினர் என்பதை நீங்கள் நிரூபித்தால், மோடி தலைமையில் நான் பாஜக-வில் இணைவது என்ற கொடுமையான தண்டனையை ஏற்க தயார்' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எஸ்.ஜி.சூர்யா ‘நீங்கள் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இருந்தால் முரசொலி அறக்கட்டளையின் பைலாவை படித்து காட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டில், ‘சூர்யா உங்களுக்கு நிர்வாகத்திற்கும், அறங்காவலருக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் முரசொலி அறக்கட்டளையின் பைலாவை படிக்கலாம். அடுத்த முறை உங்களது முட்டாள் தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தமிழிசை அக்கா.. யாருக்கா இத அறிவாளி? தயவு செய்து பதில் சொல்லுங்கள். இந்த கொசு தொல்லை தாங்க முடியல என நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.
Hi,surya u don’t know the difference between administration and trustee? U r welcome anytime to read the bylaws of murasoli trust! Anybody can ! Next time I will not reply to ur nonsense @DrTamilisaiBJP Akka ! யாருக்கா இந்த அறிவாளி ? Pls reply ! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியல https://t.co/Gf3mCgL8GM
— Udhay (@Udhaystalin) January 26, 2019