சினிமாவின் ரசிப்புதன்மைக்கு பின் பலரது கடினமான உழைப்பு இருக்கும். அதில் தனித்துவமாக இருப்பவர்கள் சண்டை பயிற்சியாளர்கள். அவர்கள் தங்களது ரத்தத்தை சிந்தி மக்களை மகிழ்விப்பார்கள்.
தமிழ் சினிமாவில் நேர்த்தியான பயிற்சியாளர்களில் முக்கியமனாவர் ஸ்டண்ட் சிவா. இவரது சண்டைக் காட்சி அமைப்பிற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். இளைய தலைமுறைக்கு தங்களின் கலையை எடுத்து செல்லும் சமகால சண்டை பயிற்சியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக, ஸ்டண்ட் சிவாவின் மகன்கள் அவரை பெருமைப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த 37வது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , ஸ்டண்ட் சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமார் ஆகியோர் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மாநில தலைவர் கராத்தே தியாகராஜன் வெற்றியாளர் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார்.
சென்னை கிழ்ப்பாக்கத்தில் உள்ள ஜே.ஜே உள்விளையாட்டு அரங்கில் கடந்த ஜன.10 - ஜன.13 வரை விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில், கராத்தே சங்க நிர்வாகிகள் கனகராஜ், அல்தாப் ஆலம் ஆகியோருடன் பெருமைக்குரிய தந்தையான ஸ்டண்ட் சிவாவும் கலந்து கொண்டார்.