இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் தனது ரிலேஷன்ஷிப் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தொடர்து பல சூப்பர்ஹிட் ஆல்பங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ பட ஆல்பம், காதலர் தினத்தில் நானி நடித்த ‘ஜெர்ஸி’ படத்தில் வரும் ‘மறக்கவில்லையே’ பாடல்கள் பெரும்பாலானோரின் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பேட்ட’ திரைப்படத்திற்கு முன்பாகவே ‘இந்தியன் 2’ படத்தில் கமிட்டானதாகவும், அந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார்.
Behindwoods-க்கு சமீபத்தில் அனிருத் அளித்த பேட்டியில், இந்தியன் 2 இசை குறித்தும், கோலிவுட்டின் சூப் பாய்ஸ் காம்போவான தனுஷ்-அனிருத் காம்போ மீண்டும் இணையவிருப்பது குறித்தும் அனிருத் பகிர்ந்துக் கொண்டார். சிம்புவுடனும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற காத்திருப்பதாக தெரிவித்தார்.
அனிருத்தின் இசைக்கும், அவரது குரலுக்கும் ஏராளமான ரசிகைகள் உள்ள நிலையில், அவரது ரிலேஷன்ஷிப் குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அனிருத், ரொம்ப நாளாகவே சிங்கிள் தான். இசையமைப்பாளர் ஆவதற்கு முன் காதலித்தேன். அதன் பிறகு இசை மட்டும் தான். காதலுக்கு தனியாக நேரம் ஒதுக்குவது அவசியம். தற்போதுள்ள பணிச்சுமையில் அதற்கு இடம் இல்லை. இப்படியே இருக்கப்போவதில்லை. காதல் வரலாம்’ என அனிருத் தெரிவித்துள்ளார்.
சிங்கிளா? கமிட்டடா?- அனிருத்தின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் இது தான் VIDEO