சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரஷா, பிரபு, விஜயகுமார், ரோபோ ஷங்கர் , யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
![Simbu's Vantha Rajavathaan varuven song list Simbu's Vantha Rajavathaan varuven song list](https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/simbus-vantha-rajavathaan-varuven-song-list-photos-pictures-stills.jpg)
குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. மொத்தம் இந்த படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பறவைகள் எனத் தொடங்கும் பாடலை சஞ்சித் ஹெக்டே மற்றும் ஹிப் ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை ஹிப்ஹாப் ஆதி எழுதியுள்ளார்.
ரெட்கார்டு என்ற பாடலை சிம்பு, ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை அறிவு எழுதியுள்ளார்.
மாடர்ன் முனியம்மா என்ற பாடலை அந்தகுடி இளையராஜா , ஸ்ரீநிஷா ஜெயசீலன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த பாடலையும் அறிவு எழுதியுள்ளார்.
ஒன்னுக்கு ரெண்டா என்று தொடங்கும் பாடலை செந்தில் கணேஷ், வி.எம்.மகாலிங்கம், சத்ய நாராயணன் இணைந்து பாடியுள்ளனர். கபிலன் வைரமுத்து இந்த பாடலை எழுதியுள்ளார்.
வாங்க மச்சான் வாங்க என்ற பாடை கௌசிக் கிரிஷ் பாடியுள்ளார். இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார்.
Here is the track list of #VRV #STR #SundarC @hiphoptamizha @MahatOfficial @CatherineTresa1 @akash_megha @iYogiBabu #RamyaKrishnan @LycaProductions #VRV #VRVFromFeb1st #VRVTrackList pic.twitter.com/5ZxkTrDFK8
— Saregama (@saregamaglobal) January 24, 2019