Petta USA All Banner
www.garudabazaar.com

சந்தோஷ் நாராயணின் பட்டயக் கிளப்பும் குரலில் மெஹந்தி சர்க்கஸில் ஆவோஜி பாடல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் ராஜூமுருகனின் கதை, வசனத்தில் உருவாகிவரும் படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை புதுமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் இயக்கிவருகிறார்.

Santhosh Narayanan sung a Avoji song in Mehandi circus

ஸ்டுடியோ கிரீன் தயாரித்துவரும் இந்த படத்துக்கு ஷான்  ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெள்ளாட்டு கண்ணழகி என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ஆவோஜி என்ற பாடல் வெளியாகியுள்ளது. துள்ளலான இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை ஷான் ரோல்டனே எழுதியுள்ளார்.

இந்த பாடல் சர்க்கஸ் பற்றிய பாடலாக இடம் பெற்றுள்ளது. சர்க்கஸ் கலைஞர்கள் பல்வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் பல்வேறு மொழி வார்த்தைகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது.

சந்தோஷ் நாராயணின் குரல் இந்த பாடலுக்கு மேலும் பலம் கூட்டுவதாக அமைந்துள்ளது

சந்தோஷ் நாராயணின் பட்டயக் கிளப்பும் குரலில் மெஹந்தி சர்க்கஸில் ஆவோஜி பாடல் VIDEO