சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு வருகிற 11 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி தமக்கு நெருங்கிய, முக்கிய பிரமுகர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.
![RajiniKanth Ignored reporters Politics questiones RajiniKanth Ignored reporters Politics questiones](https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/rajinikanth-ignored-reporters-politics-questiones-photos-pictures-stills.jpg)
அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து திருமனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
பின்பு இசையமைப்பாளர் இளையராஜாவை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தனது மகள் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவரிடம், எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கிறீங்களா என செய்தியாளர் கேட்டார், அதற்கு எனக்கு தெரிஞ்சவங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு இருக்கேன் என பதிலளித்தார்.
பின்னர், 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கேள்விகளுக்கு, கல்யாண விஷயமா வந்திருக்கேன். அரசியல் தயவு செஞ்சு கேட்காதீங்க என்றார்.