உலக அளவில் 2019-க்கான சிறந்த அரசியல் பாடல் தொகுப்பில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மகிழ்ச்சி’ ஆல்பம் இடம்பெற்றுள்ளது.
‘மெட்ராஸ்’, ‘காலா’, ‘கபாலி’ படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் இசைக்குழுவான ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழுவினரின் ‘மகிழ்ச்சி’ ஆல்பம் சமீபத்தில் வெளியானது. முழுக்க முழுக்க தனியிசைக் கலைஞர்களைக் கொண்டு பாடி இசையமைத்த இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் நிலவும் சாதிய ,வர்க்க , பாலின வேற்றுமைகளை சாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.தென்மா இசையமைத்த இப்பாடல் ஆல்பம் உலக அளவில் அரசியல் பார்வையுடைய 10 பாடல் தொகுப்புக்களில் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிரீன்லெப்ட் ஊடகத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தொகுப்புக்களில் ‘மகிழ்ச்சி’ என்கிற பாடலை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Magizhchi is rated as one of the top 10 Political Album in the world for 2019 according to @greenleftweekly . Thanks to the author Mat Ward. @beemji @KoogaiThirai @Neelam_Culture @officialneelam https://t.co/HHCdifPQfu
— The Casteless Collective (@tcl_collective) January 31, 2019