கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். அதில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களது கண்டனங்களை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய திரைப்படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
இந்த தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்திய திரைப்படங்களில் பங்கு பெறுவதற்கு அதிகாரப்ப பூர்வமாக தடைவிதிக்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.