கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
மேலும், பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கியும் தனது மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் 90களின் ரஜினியை மீட்டுக் கொண்டுவந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கன்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய புரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திகி, என படத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
#PettaLOLpromo pic.twitter.com/Yed0REqUS8
— Sun Pictures (@sunpictures) January 18, 2019