சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் பேட்ட. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் ரிலீஸ் ஆனதால் இந்த இரு படங்களின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேட்ட திரைப்படம் தொடங்கிய விதம், ரஜினிகாந்த் எவ்வாறு ஒப்புக்கொண்டார் உள்ளிட்ட சுவாரஸியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
மேலும் பேட்ட படத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்ட போது, 'இந்த படத்தின் இரண்டாம் பாதி மிக நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
முன்பெல்லாம் ஒரு படம் 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும். அப்போதெல்லாம் இப்படி குறை சொல்வதில்லை. தற்போது சிலர் அப்படி மாற்றிவிட்டனர். படம் ரிலீஸ் ஆகும் முன்பே இந்த படம் மூன்று மணி நேரம் ஓடும் என்றால், படம் மிகவும் நீளமாக இருக்கிறது என குறை சொல்கின்றனர்.
படமே பார்க்காமல் இத்தகைய விமர்சனங்களை வைக்கின்றனர். இந்த கதைக்கு தேவை என்பதால் அவ்வளவு மணி நேரம் தேவைப்பட்டது. என்னுடைய மெர்குரி திரைப்படம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக இருந்தது.
பேட்ட படத்தில் மேலும் இரண்டு காட்சிகளை வைக்கலாம் என்றிருந்தேன். விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகள் ஜித்து ஜீரா என்ற பாடலையும் படத்தில் வைக்கலாம் என்று யோசித்தேன்' என்றார்.
பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பதில்! VIDEO