சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் இருந்து தவிர்க்க முடியாமல் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மிகவும் ரசிக்கப்பட்டு எடுத்த சண்டைக் காட்சி நீக்கப்பட்டது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துக் கொண்டார்.
Behindwoods தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த கார்த்திக் சுப்புராஜ், தளபதி திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட பேக் ஷாட் காட்சியை பேட்ட படத்திலும் வைக்க திட்டமிட்டோம். ஃபிளாஷ்பேக்கில் வரும் அந்த பேக் ஷாட் காட்சியை முதலில் டிரைலருக்காக எடுத்தோம், அந்த காட்சிக்கு கூடுதல் வரவேற்பு இருந்ததால் அதனை படத்தில் சேர்க்க நினைத்தோம்.
ஆனால், படத்தின் நீளம், கதையின் வேகத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார். மேலும், மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள ரஜினி சார், அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மரியாதை கொடுத்து ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்களுக்காக நடித்துக் கொடுத்தார்.
‘பேட்ட’ படத்தில் ரஜினி சாரின் டிரேட்மார்க் சீனான தம் அடிக்கும் காட்சியை வைக்க வேண்டும் என்று நினைத்தேன். பாபா படத்திற்கு பிறகு அவர் புகைப்படிப்பதில்லை என்ற கொள்கையில் இருந்தபோது, பேட்ட படத்திற்காக தம் அடிக்கும் காட்சியை தொடர்ந்து உடம்புக்கு நல்லது இல்ல. அனுபவத்துல சொல்றேன் என்ற டிஸ்க்ளைமர் டயலாக் வைத்தது ரஜினி சாருக்கு பிடித்திருந்தது.
பேட்ட படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
‘பேட்ட’ படத்தில் நீக்கப்பட்ட டார்ச் லைட் சண்டை இதுதான் - கார்த்திக் சுப்புராஜ் VIDEO