இன்னொரு படமும் தயார் – இயக்குநர் சேரன் அதிரடி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர்  சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது  அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது.

Director Charen's next movie titled Rajavuku check was ready a

இந்த படத்தைசாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார் .இவர் ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்  இயக்குநர் சாய் ராஜ்குமார்.

‘ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்..

காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை  மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு  நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ’திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.அதே வேகத்தில் இந்த படத்திலும் நடித்துக்கொடுத்தார்.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது.    இந்த படத்தில்  சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கியவேடத்தில்  என மூன்று பேர் நடித்துள்ளனர்.

சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ள இர்பான் இதில் வில்லனாக நடித்திருக்கிறார்.இந்த படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பாக சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட்  ஆகியோர்  தயாரிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல்  படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். தெலுங்கில் பிரபலமாக உள்ள வினோத் யஜமானியா  இப் படத்தின் மூலம் தமிழுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

எமோஷனல் த்ரில்லர் என்றாலும் படத்தில் தேவையான அளவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு. ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது