குளோபல் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் உடல் ஆரோக்கியம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
சென்னையில் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 24 மணிநேரமும் இதய நோய்க்கான ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் நடிகர் தனுஷ் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், இதய நோய் குறித்தும், உடலின் ஆரோக்கியம் குறித்தும் பேசினார்.
நெஞ்சு வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் இருக்க வேண்டும். சரியான உணவு, சரியான தூக்கம், உடற்பயிற்சி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்றார். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடலுக்கு வேலை கொடுக்காமல் இருப்பதால் சோம்பேறி ஆகிவிடுகிறோம்.
வெளியே சென்று உணவு சாப்பிட்ட காலம் போய் வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. இதுவே பல நோய்கள் நம்மை ஆட்கொள்ள காரணமாகிவிடுகிறது என்றார். உடம்பு தான் கோவில் மனசு தான் தெய்வம் என்ற தனுஷ் அனைவரும் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட சுவாரஸ்யமான விஷயங்களை தனுஷ் பகிர்ந்துக் கொண்டார்.
ஆன்லைன் சாப்பாடா? வீட்டுக்காரம்மா சாப்பாடா? தனுஷின் அல்ட்டிமேட் சாய்ஸ் இது தான் VIDEO