மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
அரவிந்த் சுவாமி, சிம்பு, விஜய் சேதுபதி , அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்நிலையில் Behindwoods Gold Medal நிகழ்ச்சியில் அரவிந்த் சுவாமிக்கு சிறந்த நெகட்டிவ் ரோலுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவருக்கு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் வழங்கினார்.
விருதினை பெற்றுக் கொண்ட அரவிந்த் சுவாமி, இந்த படத்தில் எல்லோருக்கும் நெகட்டிவ் ரோல் தான் நக்கலாக தெரிவித்தார்.
பின்னர் அவருக்கு ஒரு மீம் காட்டப்பட்டது. முன்ப Most Handsome Hero இப்போ Most Stylish Villain இந்த இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என தொகுப்பாளர் ஆர். ஜே.விக்னேஷ் கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல், வில்லன் தான் என்றார்.
பின்னர் இந்த படத்துக்காக மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் சிவன், மெட்ராஸ் டாக்கீஸில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என்றார்.
அதனைத் தொடர்ந்து நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த அவர், அப்புறம் என் தம்பிங்க சிம்பு, அருண் விஜய் மற்றும் தோஸ்த் விஜய் சேதுபதிக்கு நன்றி என்றார்.