தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தனது திரையுலக தோழியுடன் இணைந்து படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். உலகளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்து, சினிமாவிற்கு தனது பங்களிப்பினை அளித்தார்.
தற்போது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் நாளை (பிப்.22) உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
இந்நிலையில், Behindwoods-ன் ’ஹக் மீ-கிஸ் மீ-ஸ்லாப் மீ’ செக்மெண்ட்டில் பங்கேற்ற தமன்னா பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது அவரிடம் திரைத்துறையில் உங்களது க்ரைம் பார்ட்னர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் தனது க்ரைம் பார்ட்னர் ஸ்ருதிஹாசன் தான் என்றார்.
மேலும், ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏதாவது கதை கேட்டால் நமக்கு செட்டாகும் என்றால் சொல்லச் சொல்லியிருக்கிறேன் என்றார்.
க்ரைம் பார்ட்னர் அந்த ஹீரோயின் தான்; யாரை சொல்கிறார் தமன்னா? VIDEO