Petta USA All Banner
www.garudabazaar.com

சமீபத்தில் வெளியான இந்த பிரம்மாண்ட படத்தை பாராட்டிய விஜய்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழில் வெளியாகும் சிறந்து படங்களை பார்த்து நடிகர் விஜய் தனது பாராட்டுக்களை தெரிவிப்பது வழக்கம். 

Actor Vijay praises KGF team

ஹொம்போல் பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கிய படம் கே.ஜி.எஃப்.  கோலார் தங்கச் சுரங்கம் பற்றிய இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக மிரட்டியிருந்தார்.

கன்னட மொழிப்படமான இது  கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது. கே.ஜி.எஃப் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை அறிந்த "தளபதி" விஜய் இப்படத்தை காண விரும்பினார்.

அவருக்காக சென்னையில் பிரத்யேகமாக இப்படத்தை படக்குழுவினர் திரையிட்டனர்.

படத்தை பார்த்த நடிகர் விஜய், கே.ஜி.எஃப் படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக பாராட்டினார்.

மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 'தளபதி' விஜய்யின் பாராட்டை பெற்ற "கே.ஜி.எஃப்" படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர்.

Tags : Yash, Vijay, KGF