BEHINDWOODS COLUMN

கதைக்காரி

YUVAN கொடுத்த முத்தம்!

Home > Columns
Yuvan Shankar Raja Birthday special Column

அன்னைக்கு ஆபீஸ் பரபரப்பா இருந்துச்சு... மச்சா அந்த கொஸ்டின் கேளு இந்த பாட்ட பத்தி கேளுன்னு எல்லாரும் ஆளுக்கு ஆளுக்கு ஒவ்வொன்னு சொல்லிட்டு இருந்தோம்... எல்லாருக்கும் யுவன் கிட்ட கேக்க, சொல்ல ஏதோ ஒன்னு இருந்துச்சு.... இன்டெர்வியூ பண்ண போன anchor-ட கண்டிப்பா இது ஒரு Incomplete Conversation ah தா இருக்கும்னு சொன்னேன்...

யுவன் எனக்கு அம்மா மாதிரி... இந்த Romanticise பண்ற அம்மா கெடயாது ரியாலிட்டி அம்மா.... டெய்லி அம்மாவ நாம கண்டுக்கவே மாட்டோம் ஆனா நம்ம கொஞ்சம் insecured ah உணர்ந்தா கூட அம்மா நெனப்பு வந்துரும்... அந்த மாதிரி... மெனக்கெட்டு வர்ர எல்லா புது யுவன் பாட்டு கேக்கணும்லா இருந்ததே  கெடயாது... நல்ல பாட்டு காதல் மாதிரி அது நம்மள தானா வந்து சேரும்னா வந்து சேரும் நம்புறவ நான்.. ஆனா கொஞ்சம் உள்ள ஒடஞ்சு போனாலும் ஓடி போறது யுவன் கிட்ட தான்...


வாழ்க்கையே முடியப்போகுதுனு இருந்தப்போ கேட்ட ஒரு நாளில் வாழ்க்கை பாட்டு... எப்போ தனியா உணர்ந்தாலும் உனக்காக தானே இந்த உயிர் உள்ளது பாட்டோ... என்ன வேணாம்ணு சொன்னவன நெனச்சு கோவமா கேட்ட உன்னை உன்னை தவிர வேறெதுவுமில்லை பாட்டோ... யுவன் என் வாழ்க்கையோட இழையோடி இருக்கான்...


யோசுச்சு பாத்த யுவன் தா என் பால்ய காலத்தின் முதன்மை காதலன்னு தோணுது... புரியாத வயசுலயே அவன் குரலுக்கு, வசீகர சிரிப்புக்கு.. அவன் மை கலருக்கும் ரொம்பவே Fan... மீடியல வொர்க் பண்றதுனாலயே அடிக்கடி யுவன பார்க்க நேர்ந்துருக்கு... முதல் தடவ பார்த்தப்போ பல்லெல்லாம் தெரியுற மாதிரி சிரிச்சுட்டு இருந்தேன்.. பக்கத்துல போய் உங்க பேன் ஒரு போட்டோன்னுலாம் கேக்க தயக்கம்... விட்டுட்டேன்... நான் வேல பாத்த ரியாலிட்டி ஷோ ஓட பைனல்ஸ.. ஓடி ஓடி வேல பாத்துட்டு இருந்தேன்.. யுவன் அந்த ஷோ ஓட ஒரு சீப் கெஸ்ட்... கெஸ்ட் ரூம்ல யுவன்... நான் யுவன் பேன்னு தெரிஞ்ச அந்த pro திடீர்னு யுவன் இருந்த ரூம்குள்ள கூட்டிட்டு போய்ட்டாரு... யுவன பாத்த படபடப்புல என்ன பேசுறதுன்னு தெரியாம ஐ லவ் யு சார்... ஐ லவ் யு சார்னு சொல்லிட்டே இருந்தேன்... எல்லா லவ்யூக்கும் அவன் Trademark சிரிப்போட Thank you Thank you-னு சொல்லிட்டு இருந்தான்.. குழந்த மாதிரி...

உச்சி வெயில்ல நடக்கும் போது சிலிர்க்க வைக்கும் போது.. குளிக்கும் போது தண்ணீரோட சேந்து வழியுற கண்ணீரும்... 100 ஆயிரம் தடவ கேட்டு சலுச்ச பாட்ட திரும்ப கேக்கும் போது ச்ச யுவன்னு தோணும்... என்னோட 11 வயசுல அவன் மேல ஆரம்புச்ச காதல் இப்ப வர்ர நிரம்பி வழுஞ்சு ஓடிட்டு இருக்கு... அந்த INCOMPLETE CONVERSATION-ல நான் என்னோட Broken English-ல எழுதி குடுத்த Letter-க்கு அவன் குடுத்த முத்தம் என் வாழ்க்கையோட மறக்கவே முடியாத முத்தம்!


HAPPY BIRTHDAY முத்தக்காரா...!


Respond to nivitha@behindwoods.com
Behindwoods is not responsible for the views of columnists.

ABOUT THIS PAGE

This page hosts the views of the authors of the column. The views are generally about films, movie reviews, movie news, songs, music, film actors and actresses, directors, producers, cinematographers, music directors, and all others that contribute for the success or failure of a film. People looking for movies online, movie reviews, movie analysis, public response for a movie, will find this page useful.