நெதர்லாந்து நாட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, மர்மநபர்களின் வெறிச்செயல்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | Mar 18, 2019 06:10 PM
நெதர்லாந்து நாட்டின் யூட்ரெக்ட் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் அடைந்துள்ளனர். இங்குள்ள டிரோம் ஸ்டேஷன் அருகில் உள்ள சதுக்கத்தில் காரில் வந்த மர்ம நபர் அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு காரில் ஏறி தப்பிச்சென்றுவிட்டான்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நெதர்லாந்து நேரப்படி காலை 10:45 மணிக்கு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிர் இழந்து இருப்பதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் குவிந்துள்ளனர்.
துப்பாக்கி சம்பவத்தையடுத்து மீட்டுப் பணிகளுக்காக 3 ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டிராம் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமோ என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து நெதர்லாந்து மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.