தோழியுடன் லிவிங் டுகெதர்.. கணவருடன் லவிங் டுகெதர்.. அமெரிக்க பெண்ணின் அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Mar 05, 2019 01:38 PM
அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனது காதல் கணவரின் ஒப்புதலோடு தோழியுடனும் (லிவிங் டுகதரில்) கணவருடனும் ஒரே வீட்டில் வாழ்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நம்மூரில் 377 தீர்ப்பு வந்ததன் பிறகுதான் தன் பாலினச் சேர்க்கை பற்றிய புரிதல் வெகுவாக வந்திருக்கிறது எனலாம். ஆனால் அமெரிக்காவில் இதற்கெல்லாம் விதிவிலக்குகள் இருந்தாலும் கூட அங்கும் நாகரிகம் கருதியும் சுற்றத்தினரின் வாய்ச்சொல்லுக்கு பயந்தும் விருப்பப் படி வாழாமல் இருக்கவும் செய்கின்றனர்.
இந்த நிலையில் இதற்கெல்லாம் கவலைப்பட போவதில்லை என்று சொல்லி அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் வசிக்கும் 22 வயதான கரலின் ஹென்றி அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார். தனது பால்ய நண்பரான ஜஸ்டின் என்பவரை அண்மையில் திருமணம் செய்த கரலின் ஹென்றி, தனக்கு ஒரு பெண் தோழி வேண்டும் என்கிற ஆசையைச் சொன்னதும், அதற்கு அவரது கணவர் சம்மதித்துள்ளார்.
அதன் பிறகு கரலின், தன் கணவரின் யோசனைப்படி, சமூக வலைதளத்தின் மூலம் லூனா என்கிற ஐரிஷ் பெண்ணிடம் நட்பாக பழகி, தங்கள் திருமணத்துக்கு அழைத்துள்ளார். அப்போது லூனா வந்திருக்கிறார். அங்கு மூவரும் கூடி பேசி முழுமையான நண்பர்களானதோடு, கரலின் தன் காதல் தோழியான லூனாவுடனும், தனது காதல் கணவரான ஜஸ்டினுடனும் ஒரே வீட்டில் வாழும் யோசனையைச் சொல்லியிருக்கிறார்.
அவ்வப்போது லூனா அயர்லாந்துக்குச் சென்று வந்தாலும், அமெரிக்காவில் மூவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழும் முடிவினை கடந்த பிப்ரவரி மாதம் எடுத்துள்ளனர். இப்போது இந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வலம் வருகின்றன.