MIC Mobile BNS Banner
"வைரமுத்துவை கடவுள் தண்டிப்பார்" சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

ஆண்டாள் குறித்து கூறிய கருத்தால் கவிஞர் வைரமுத்துவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. காவல் நிலையங்களில் உள்ள தன்மீதான வழக்குகளுக்கு தடை கேட்டு வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வைரமுத்துவின் மீதான மனுவை ஏற்று அவர் மீதான பல்வேறு வழக்குகளுக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஆண்டாள் குறித்து கருத்து கூறிய கவிஞர் வைரமுத்துவை கடவுள் தண்டிப்பார் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் திடீர் போராட்டத்தால் சென்னையில் பரபரப்பு
தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணம் கடந்த 2௦-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த புதிய கட்டணம் குறித்த மனக்குமுறல்களை பொதுமக்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வு தங்களை வெகுவாகப் பாதிப்பதாகக் கூறி, சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுபோல தஞ்சை, திருவண்ணாமலை, திருப்பூர்  மாவட்டங்களிலும் பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது....
Read More News Stories