பாதுகாப்பு அதிகம் என நினைத்தே அவனை ரயிலில் போகச் சென்னேன் - விபத்தில் இறந்தவரின் தாய் கண்ணீர்

Home > News Shots > Tamil Nadu

By |
St Thomas Mount train accident: Deceased Naveen\'s mother laments advis

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று காலை நடந்த கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். ரயில் நிலையத்தில் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மீது மோதி கீழே விழுந்ததில் நவீன் குமார், பரத், சிவகுமார் மற்றும் வேல்முருகன் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்தில் இறந்த 23 வயது நவீன் தனது இருசக்கர வாகனத்தை பழுதுபார்க்கும் நிலையத்தில் விட்டிருந்ததால் அன்று இரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அழுகையுடன் காணப்பட்ட அவரது தாய் மலர் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என்று அறிவுரை கூறி நவீனை அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மகன் இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவலைக் கேட்டிருக்கிறார்.


தன் மகனுக்கு ரயிலில் போகச்சொல்லி அறிவுரை வழங்கியதற்காக அவர் தன்னையே நொந்து அழுததாக கூறப்படுகிறது. குடும்பத்தின் முதல் பட்டதாரியான நவீன் மோட்டார் ஷோரூமில் வேலை பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #STTHOMASMOUNTTRAINACCIDENT #CHENNAITRAINACCIDENT