உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும், தி.மு.க கட்சியினர் அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார். இதேபோல திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தி.மு.க-வின் இந்த போராட்டத்துக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்களும் ஆதரவு தெரிவித்து, களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்திய காரணத்துக்காக தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,௦௦௦-க்கும் மேற்பட்டோரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், அனுமதியின்றி சென்னை கொளத்தூரில் சாலைமறியல் போராட்டம் நடத்திய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், சைதையில் போராட்டம் நடத்திய மதிமுக கட்சித்தலைவர் வைகோ ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.