அதிமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சியின் துணைத் தலைவரும் நடிகருமான ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Feb 26, 2019 07:02 PM
பாமக மாநில துணைத்தலைவரும், நடிகருமான ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மிக அண்மையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் அதிமுகவுடன் பாமக இணைந்தது. இதில் பாமக மாநிலங்களவை தொகுதி உட்பட 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதனையடுத்து, பாமக மாநில மகளிரணி செயலாளாராக இருந்த இராஜேஸ்வரி பிரியா, தான் ஆக்கப்பூர்வமாக கட்சிக்கு பணிகளைச் செய்ய வந்ததாகவும் ஆனால் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து, தன் ஆற்றல்களை வீணாக்கியதாலும் தான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக முதன்முதலில் பகிரங்கமாக அறிவித்தார்.
கடந்த வாரம் வரை பாமக தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் கூட்டணி வைப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூட்டணி தொடர்பாக பாமக தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை என்றும் பேட்டியளித்துள்ளார். அதே சமயம், தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பாமகவின் பொதுக்குழுவில் அறிவித்தார்கள் என்று பேசிய ரஞ்சித், பாமக-வின் மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.