"எடப்பாடி அணிக்கே கட்சியும் சின்னமும் என்பது குரங்குகள் கையில் கிடைத்த பூமாலை போன்றது"

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் அறிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் எடப்பாடி அணிக்கு கட்சியும் இரட்டை இலை சின்னமும் என்பது குரங்குகள் கையில் கிடைத்த பூமாலை போன்றது என கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடப்பதாக குற்றம் சாட்டினார். பிப்ரவரி மாதத்தில் நான் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என்பதற்காகத்தான் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதாகவும் அப்போது தேர்தல் ஆணையம் பெரும்பான்மை குறித்து பார்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். பிப்ரவரியில் தனது அணிக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததாகவும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சட்ட ரீதியாக போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

BY |

OTHER NEWS SHOTS

"எடப்பாடி அணிக்கே கட்சியும் சின்னமும் என்பது குரங்குகள் கையில் கிடைத்த பூமாலை போன்றது"
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் அறிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் எடப்பாடி அணிக்கு கட்சியும் இரட்டை இலை சின்னமும் என்பது குரங்குகள் கையில் கிடைத்த பூமாலை போன்றது என கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடப்பதாக குற்றம் சாட்டினார். பிப்ரவரி மாதத்தில் நான் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என்பதற்காகத்தான் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதாகவும் அப்போது தேர்தல் ஆணையம் பெரும்பான்மை குறித்து பார்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். பிப்ரவரியில் தனது அணிக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததாகவும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சட்ட ரீதியாக போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்....
Read More News Stories