சிறைக்குள் நிர்மலாதேவி தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Feb 28, 2019 06:34 PM
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மாலாதேவி சிறைக்குள்ளேயே தற்கொலைக்கு முயன்றதாக அவரது வழக்கறிஞர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் தொல்லை உட்பட பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த முறை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததால் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டதாக நிர்மாலாதேவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்,‘சென்றமுறை காவல் நீட்டிப்புக்கு இதே நீதிமன்றத்துக்கு வருகைதந்தபோது பேட்டியளிப்பதற்காக முயன்றது, காவல்துறை அவரை பேட்டி அளிக்க விடாமல் தடுத்ததையெல்லாம் நீங்கள் அறிவீர்கள். அதனால் அவருக்கு ஏற்பட்ட உராய்வில் மிகப்பெரிய காயம் உடம்பில் ஏற்பட்டிருக்கிறது. வாயைப் பொத்தி, கையை இழுத்து, காலை இழுத்து தூக்கிக்கொண்டு போய் அவரை பெரிய குற்றவாளி போன்று சித்ரவதை செய்தார்கள். அது சம்மந்தமாக மனித உரிமை ஆணையத்தில் காவல்துறை மீது புகார் கொடுத்துள்ளோம். தொடர்ந்து அவர் நீதிமன்றத்துக்கு வரும்போது இது போன்ற சம்பவங்களில் காவல்துறை ஈடுபடக்கூடாது. கடந்த முறை தவறாக ஈடுபட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லி மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பட்டுள்ளது’ என அவர் கூறியுள்ளார்.