மதுரை ஆதினத்தின் 292-வது மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் தான் மடாதிபதியாக பதவியில் இருந்தபோது நித்யானந்தாவை 293-வது மடாதிபதியாக அறிவித்தார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அத்துடன் மதுரை நீதிமன்றத்திலும் நித்யானந்தாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பலமுறை வாய்தா கொடுத்தும் நித்யானந்தா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், நித்யானந்தா மீதான வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, நித்யானந்தா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பிப்ரவரி 2-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிடில், நித்யானந்தாவைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும் எனவும், நீதிபதி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.