கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்தாலும் விலையேற்றத்தால் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்துள்ளது 'மல்லிகைப்பூ'.
தமிழ்நாட்டின் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மல்லிகை சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 5௦௦ ஏக்கருக்கு மேல் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு மல்லிகை பூக்கவில்லை.
எனினும் தொடர் முகூர்த்த நாட்கள் காரணமாக மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு, தற்போது கிலோ ரூ.6௦௦௦ முதல் 7௦௦௦ வரை விற்பனையாகிறது.
இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என சோகத்தில் இருந்த விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.