MIC Anthem Mobile BNS Banner
அஸ்வினை பஞ்சாப்புக்கு தாரை வார்த்த சிஎஸ்கே.. சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 11-வது ஐ.பி.எல் ஏலம் பெங்களூரில் இன்று காலை 1௦ மணிக்குத் தொடங்கியது.

 

முதல் வீரராக ஷிகர் தவான் ஏலத்தில் விடப்பட்டார். அவரை பஞ்சாப் அணி 5.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. எனினும் ஹைதராபாத் அணி 'ரீடெயின்' முறையில்  தவானைத் தக்க வைத்துக் கொண்டது.

தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலத்தில் விடப்பட்டார். அவரை ஏலத்தில் எடுக்க சென்னையைத் தவிர, பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

 

இறுதியில் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ 7.6௦ கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது. சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வினை ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி விட்டுக்கொடுத்தது சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

அதே நேரம், அஸ்வினை விட்டுக்கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories